மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

0 355
Stalin trichy visit

உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு திருச்சி லுப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பார்வையற்றவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. திருச்சி, சென்னை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டனர்.

முதல் பரிசு பெற்ற திருச்சி அணிக்கு கோப்பையும், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. 2-வது பரிசு பெற்ற சென்னை அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும், மூன்றாம் இடம் பிடித்த கன்னியாகுமரி அணிக்கு ரூ.4 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

அத்துடன் 200 பார்வையற்றவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும் நாகமங்கலத்தில் வாழும் பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோழிஇறைச்சி வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.