கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தியவர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்துவதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திக் கொண்டிருந்தனர்.
போலீசாரைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் மணல் மூட்டைகளுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் அவர் லால்குடி அருகே உள்ள எசனக்கோரையைச் சேர்ந்த ராஜா மகன் 20 வயதான பிரகாஷ் என தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 இருசக்கர வாகனங்கள், 8 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.