மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்த 4 பேர் கைது!

0 575
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பணை அதிகரித்து வந்த நிலையில் மணப்பாறை போலீசார் லாட்டரி விற்பணை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர சோதனையில் இறங்கினர்.

 

இந்நிலையில் மணப்பாறையின் பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பணையில் ஈடுபட்ட மணப்பாறை, தர்மலிங்கம் தெருவைச் சேர்ந்த முருகேசன் (வயது 48), சாம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 38), வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த அய்யாவு (வயது 41), ராக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ 3190 ரொக்கப்பணம், 3 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.