முதல்வர் வருகையையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்துக்கு தடை 

0 723
Stalin trichy visit

 

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜிநகர் கேர் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

 

இவ்விழாவில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பயனாளிகள் மற்றும் கட்சியினர் பல்வேறு வாகனங்களில் வருகைதர இருப்பதால், விழா நடைபெறும் நாளான 30-ந் தேதியன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திண்டுக்கல்லிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி இயக்குவதற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

 

* திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் அனைத்தும் அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மன்னார்புரம் சென்று சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும்.

 

*திண்டுக்கலிருந்து திருச்சி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் அனைத்தும் மணப்பாறை, விராலிமலை வழியாக மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம் வழியாக மத்திய பஸ் நிலையம் சென்றடைய வேண்டும்.

 

* திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று கரூர்-திருச்சி பிரதான சாலை வந்து ஜீயபுரம் வழியாக திருச்சி வந்து சென்னை செல்ல வேண்டும்.

 

*திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் இலகுரகம் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூர், புதுக்கோட்டை சுற்று வட்ட சாலை வழியாக துவாக்குடி அடைந்து தஞ்சாவூர் செல்ல வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.