2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது 

0 256
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக முசிறியை சேர்ந்த செல்வகுமார்(வயது 31), கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரத்தை சேர்ந்த சங்கர்(வயது 31) ஆகியோர் திருவெறும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இருவரும் வெளியே வந்தால் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் செல்வகுமார், சங்கர் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.