மாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

0 279
Stalin trichy visit

திருச்சி சிந்தாமணி பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 76). இவர் தையல் எந்திரம் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தையல் எந்திரம் பழுது பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அந்த வீட்டில் மாலை வரை இருந்து தையல் எந்திரம் சரி செய்து கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் அதேவீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, அந்த வீட்டில் இருந்த 11 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

 

அப்போது மளிகை கடைக்கு சென்று இருந்த சிறுமியின் தந்தை வீடு திரும்பி வந்தார். சிறுமியின் சத்தம் கேட்டு ஓடி சென்ற அவர், ஜெயராமனை பிடித்து பொன்மலை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், பொன்மலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல்அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.