தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி திருச்சி DYFI அமைப்பினர் சார்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு!
திருச்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்குள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்களையும், குழந்தைகளையும், தெரு நாய்கள் கடிப்பது வாடிக்கையாகி விட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கோணக்கரையில் நாய்கள் அறுவை சிகிச்சை மையம் ஏற்படுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்திட மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் தற்போது வரை இதனை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே, நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், வெறி நாய்களை அப்புறப்படுத்திவும் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது இதனையும் அகற்றிட வேண்டுமெனவும் உடனடியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் இன்று DYFI அமைப்பினர் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், ஷாஜகான், சேதுபதி, ராகிலாபானு மற்றும் சோலை, அஜ்மல்,முகேஷ், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo