கணவர் இறந்த துக்கம் தாங்காமல் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு

0 418
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையில் புத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி நிஷா(21),கார்த்திக் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது இளவேனில் நிலவன் என்ற குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நிஷாவின் கணவரது நினைவு தினத்தையொட்டி சோகமாக இருந்துள்ளார். இதையடுத்து நேற்று பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த சமயத்தில் தனது ஒன்றரை வயது மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தனது இடது கை மணிக்கட்டு பகுதியை கத்தியால் அறுத்துக்கொண்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.