அமமுகவை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
மணிகண்டம் வடக்கு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த அமமுக பேரவை செயலாளர் T.இளங்கோவன், பேரவை இணைச் செயலாளர் P.கலைச்செல்வம், முன்னாள் ஊராட்சிக் கழகச் செயலாளர் ஜேம்ஸ், மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8