கர்ப்பிணிகளுக்கு மஞ்சள்காமாலை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம்
கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினால் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறிகளுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இந்த நிலையில் உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு மஞ்சள்காமாலை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் சிவராசு கலந்து கொண்டு, பரிசோதனை முகாமையும், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.