திருச்சியில் தொப்புள் கொடியுடன் குப்பையில் ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை வீசப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று
குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோட்டை காவல் நிலைய போலீசார் வீசி விட்டு சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo
