திருச்சி திருவெறும்பூர் படைக்கலன் தொழிற்சாலையில் கார்பைன் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்
திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டில் அமைந்துள்ள படைகலன் தொழிற்சாலையில் கார்பைன் என்கிற புதிய ரக துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவானது படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. OFTயின் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, திருச்சி கார்பைன் துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய ரக துப்பாக்கியானது படைக்கலன் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.இது சிறிய மற்றும் இலகு ரக ஆயுதமாகும். இதனை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் பொருத்தப்பட்டுள்ள (special muzzle booster) சிறப்பு முகவாய் பூஸ்டர் மூலம், துப்பாக்கி சூட்டின் போது எழும் ஒளி மற்றும் சத்தத்தை குறைக்கிறது.இந்த துப்பாக்கியில் அசால்ட் ரைபிளின் வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தலாம். இதேபோல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே47ன் உதிரிபாகங்களை பயன்படுத்திக்
கொள்ளலாம். திருச்சி கார்பன் புதிய ரக துப்பாக்கியை பாதுகாப்பு வீரர்களின் கவச உடைக்குள் மறைத்து வைத்து பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.