திருச்சியில் சந்தன மரம் வெட்டியவர் கைது

0 346
Stalin trichy visit

 

திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்காவில் மரத்தை ஒரு நபர் வெட்டிக் கொண்டிருப்பதாக செஷன்ஸ் கோர்ட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்று பார்த்தபோது சந்தன மரத்தை ஒருவர் வெட்டி கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதில் விசாரணை செய்ததில் தஞ்சை மாவட்டம் சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த நொண்டிக் குமார் என்கிற அழகேசன்(34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து செஷன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற சந்தன மரத்தை குறி வைத்து வெட்டக் கூடிய கும்பலை சேர்ந்தவரா – இவர் மீது ஏற்கனவே வேறு ஏதும் வழக்கு பதிவு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.