இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்களின் நிர்வாக வரம்பு, பணிகள் ஒதுக்கீடு

0 17
Stalin trichy visit

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்களின் நிர்வாக வரம்பு, பணிகள் ஒதுக்கீடு

சென்னை, திருச்சி மண்டலத்துக்கான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பணியிடம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கூடுதல் ஆணையர்களுக்கு நிர்வாக வரம்பை ஒதுக்கீடு செய்யவும், அவர்களுக்கான அதிகாரங்கள் மற்றும் பணிகளை வழங்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் அரசை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்துச மய அறநிலையத்துறை ஆணையரின் முன்மொழிவுகளை அரசு கவன மாக பரிசீலித்து, தெற்கு மற்றும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்க ளுக்கான நிர்வாக வரம்பு ஒதுக்கீடு அங்கீகரிக்கப்படுகிறது. சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி மண்டலத்தில் திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவை கூடுதல் ஆணையர்களின் நிர்வாக வரம்புக்குள் வரும். துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் மதிப்பாய்வு செய்வது மற்றும் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.