அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் அங்கக வேளாண்மை குறித்து செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் அங்கக வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஞ்சகவ்யாவின் பயன்பாட்டினையும், அதன் தயாரிப்பு முறைப் பற்றிய செய்முறை விளக்கத்தினையும் அளித்தனர். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இந்நிகழ்வில் செம்பரை கிராம முன்னோடி விவசாயிகள் திருச்சி அன்பில் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.