திருச்சி மாவட்டம், துவாக்குடி தெற்குமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(வயது 35). இவர் கடந்த 12.4.2009 அன்று அதே பகுதியைச் சேர்ந்த சம்பு என்பவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை கழுத்தில் கத்தியை வைத்து காயப்படுத்தி பறித்துச் சென்றார்.
இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து, வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கந்தசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.