டீக்கடைகளில் 9 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்

0 390
Stalin trichy visit

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் திருச்சி மாநகர பகுதியில்உள்ள டீக்கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது 8 கடைகளில் சந்தேகத்திற்கு இடமான 9 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறியப்பட்டு வழக்கு போடுவதற்காக 8 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அபராத தொகையாக ரூ.15 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் காலாவதியான குளிர்பானங்கள் 11 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.