திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோயில் அருகே திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நெடுஞ்சாலையோர முட்புதருக்கிடையே தூக்கிட்ட நிலையில்,
ஒரு கால் மரத்தில் வைத்தும், ஒரு கை மரக்கிளையை பிடித்தபடி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றினர். அவரை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் குறித்தும், உயிரிழந்த காரணம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.