வயிற்று வலியை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தற்கொலை!
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன்தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் சத்யபிரியா (வயது 15). அப்பகுதி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சத்யபிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.