விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி
திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தில் ஒரு பகுதியாக அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு கிராமத்தில் புடலை சாகுபடி செய்திருந்த விவசாயிகளிடம் புடலை சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விளக்கினர்.
இதில் புடலை செடியில் பெண் பூக்களை அதிகரிக்க எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் தண்ணீரில் 100 பிபிஎம் கலந்து, விதைத்த 15 நாட்களுக்கு பிறகு 7 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை தெளிப்பதன் மூலம் புடலை சாகுபடியில் நிறை வான மகசூல் செய்து அதிக லாபம் ஈட்ட முடியும் என விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.