போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா சென்றவர் கைது

0 343
Stalin trichy visit

மலேசியாவில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த ஆனந்தகுமார்(47) என்பவர் தனது பெயர் மற்றும் முகவரியை மாற்றி போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி ஏர்போர்ட் போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.