சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பு – அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் : அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் வலியுறுத்தல்

0 43
Stalin trichy visit

சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் – அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் வலியுறுத்தல்!

2026–2027 மண்டல–மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சங்கத்தின் தேசிய செயலாளர் தினேஷ்  திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவருக்கும், பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கும் தனித்தனியாக கோரிக்கை மனுக்களைச் அனுப்பியுள்ளார்.

அம்மனுவில்,

1. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி வரிசை: தற்போது நடைபந்தல் பகுதியில் மட்டுமே உள்ளது தனி வரிசை வசதியை, பம்பையிலிருந்தே தொடங்கி சன்னிதானம் வரை தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டும்.

2. தரமான உணவு – நியாயமான விலை: சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சுகாதாரமான, தரமான உணவுகள் நியாயமான விலையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதிக விலை வசூலிப்பதையும் தரமற்ற உணவு வழங்குவதையும் தடுக்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

3. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்: பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதுடன், தேவையான இடங்களில் தடையற்ற குடிநீர் மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் 2026–2027 மண்டல–மகரவிளக்கு காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வசதிகள் எதிர்காலத்திலும் நிரந்தரமாகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.