கடனாக பெற்ற பணத்தை அபேஸ் செய்த திருடன்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி(50). இவர் தொட்டியத்தில் உள்ள தனது உறவினரிடம் ரூ.50 ஆயிரத்தை கடனாக பெற்றுக் கொண்டு அதனை மணிபர்சில் வைத்துக்கொண்டு தொட்டியத்தில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சில் ஏறி முசிறி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார். அப்போது மணிபர்ஸ் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயலட்சுமியின் மணிபர்சை திடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.