திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கொட்டபட்டியை சேர்ந்தவர் சங்கன்(வயது 60). மண் பாண்ட தொழில் செய்து வரும் இவர், சம்பவத்தன்று இரவு கோயிலுக்கு சென்றுவிட்டு கொட்டபட்டி என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது மணப்பாறையிலிருந்து குளித்தலை நோக்கிச் சென்ற பைக் சங்கன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.