ஸ்வீட் கடை சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை!

0 362
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்வீட் கடை உள்ளது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களத்தை சேர்ந்த சரவணன்(வயது 45) சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். கடையின் மேல் தளத்திலுள்ள அறைக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

சந்தேகத்தின்பேரில் ஓய்வு அறைக்கு சென்ற கடை ஊழியர், சரவணன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.