அன்பில் தர்மலிங்கம் நினைவு தினம்-அமைச்சர் அன்பில் மகேஸ் அஞ்சலி!
திருச்சி வி.என்.நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் உருவப்படத்திற்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு

நலிந்தோர் மற்றும் கல்வி உதவிக்கான 3.5 லட்சம் மதிப்புள்ள காசோலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.