கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த 2 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது .

0 263
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 02.02.2022-ம்தேதி கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்டகலைஞர் அறிவாலயம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் கத்தியை காட்டிமிரட்டி ரூ.2000/-பணமும், அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றதுதொடர்பான கொடுத்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில்வழக்குப்பதிவு செய்தும், எதிரி மகாமணி வயது 29, த.பெ.பன்னீர்செல்வம் என்பவரைகைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 08.02.22-ம்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புதூரில் உள்ள நாகநாதர் டீ ஸ்டால் அருகே நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றது தொடர்பான கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், எதிரி மணிகண்டன் வயது த.பெ.குமார் என்பவரை கைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 23,

மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் எதிரி மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகளும், எதிரி மகாமணி மீது 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, மேற்படி எதிரிகள் மகாமணி மற்றும் மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.