திருச்சியில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த்தாக அரவிந்த்(வயது 25), ஜெர்பின்(வயது 23) ஆகியோரை சமீபத்தில் அரியமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில்
இவர்கள் இருவரும் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்கள் என்று தெரிய வந்துள்ளதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதுபோல் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர
வாகனத்தை பிடுங்கி சென்ற வழக்கில் மகாமணி(வயது 29) என்பவரும், பாலக்கரை கீழபுதூரில் கத்தியை காட்டி மிரட்டி ஒருவரிடம் இருந்து பணத்தை பறித்த வழக்கில் மணிகண்டன்(வயது 23) என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில்
உள்ளனர். இதில் மணிகண்டன் மீது 10 வழக்குகளும், மகாமணி மீது 14 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இருவரும் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்கள் என்று தெரிய வந்ததை தொடர்ந்து இவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.