வீடு புகுந்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது!

0 402
Stalin trichy visit

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு டிப்ளமோ படித்து வருகிறார். ஆட்டோ டிரைவரும், அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். 17 வயதாகும் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட

 

பக்கத்து வீட்டு வாலிபர் மாணவியிடம் தவறாக நடந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்குப்பதிந்து, விஜி என்கிற மெல்வின் அர்னால்டு (வயது 27) என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். பின்னர் அந்த வாலிபர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.