க.அன்பழகனின் உருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மலர்தூவி அஞ்சலி!

0 317
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளரும், பேராசிரியருமான க.அன்பழகனின் 2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திருச்சி வி.என்.நகரில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு

மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாநகர துணை மேயர் திவ்யாதனுஷ், கே.என்.சேகரன்
வன்னை அரங்கநாதன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.