குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் சாவு!

0 248
Stalin trichy visit

 

கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து சிவகங்கை நோக்கி காவிரி குடிநீர் கொண்டு செல்வதற்கு பிரமாண்ட குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம், பெரியமணப்பட்டி அருகே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம், குஷிநகர் மாவட்டம், தேஜாவளியா பகுதியைச் சேர்ந்த கௌதம் சவுகான் வயது 30 என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் பள்ளத்தில் குழாயை வைத்து பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக குளியில் தவறி

விழுந்தார். அப்போது அவர் தலைப்பகுதி பிரமாண்ட குழாய் மீது பட்டத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கு உடன் பணியாற்றிய ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இறந்தவர் உடலை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு அங்கும் இங்குமாக சுற்றியுள்ளனர். இறுதியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு

கொண்டு சென்றனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு வேனில் தொழிலாளியின் உடல் ஏற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Leave A Reply

Your email address will not be published.