திருச்சி பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமணி (வயது 47). இவர் ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடும்ப தகராறும் ஏற்பட்டு வந்ததாக
கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் அவர் முன்பு குடியிருந்த ரெயில்வே குடியிருப்பு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட
அந்த பகுதியினர் பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.