பசியாய் இருந்தால் எடுத்துக்கோங்க! ஐய்யப்பன்

0 197
Stalin trichy visit

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்களால் உணவின்றி வாடுவோருக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளால் உணவளிக்கப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில் பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் திருச்சி ஐயப்பன் கோவில் பசியால் வாடுவோருக்கு உணவளிக்கும் விதமாக கோவிலின் முன்பு ஒரு டேபிளில் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டுள்ளன. பசியால் உள்ளவர்கள் எடுத்து செல்லலாம் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.கொரோனா நேரத்தில் பசியால் வாடுவோருக்கு ஐய்யப்பன் கோவில் சார்பில் உணவளித்து இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் உணவு பொட்டலங்களை எடுத்து சென்று தங்கள் பசியை தீர்த்துக் கொள்ளுகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.