வளர்ச்சி பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் இனாம்தார் தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாநகராட்சி ஆணையர் முஜீப்புர் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து

செயற்பொறியாளர் சிவபாதம், கோ அபிஷேகபுரம் உதவி ஆணையர் செல்வபாலாஜி, உதவி செயற்பொறியாளர் ரஜேஷ்கண்ணா, சுகாதார அலுவலர் இளங்கோவன், உதவி சுகாதார ஆய்வாளர் அல்பர்ட் ஆகியோருடன் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இதில் 28வது வார்டு கவுன்சிலர் பைஸ் அகமது மற்றும் திமுக, மமக வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.