வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு!

0 310
Stalin trichy visit

திருச்சி சத்திரம் சங்கரன்பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (வயது 30). இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேவதி துறையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக

வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த அரை பவுன் மூக்குத்தி மற்றும் ரூ.2000 திருடு போயிருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து ரேவதி கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.