பெண்கள் என்றாலே அழகுதான்-நீதிபதி பேச்சு!
தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான K.பாபு வழிகாட்டுதழின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதன்மை மாவட்ட சார்பு நீதிபதியுமான K.விவேகானந்தன் ஆலோசனைபடியும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் மற்றும் சீதாலட்சுமி இராமசாமி பெண்கள் கல்லூரியும் இணைந்து அகில உலக மகளிர் தின விழா – 2022
திருச்சி சீதாலட்சுமி இராமசாமி பெண்கள் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. விழாவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 திருச்சி D.திருவேணி கலந்துக் கொண்டு பேசும்போது “பெண்களுக்கு எது அழகு” என்ற தலைப்பில் பெண்கள் என்றாலே அழகுதான், பெண்களுக்கு அழகு படிப்பு. ஆலுமை என்றும் சிங்கப்பெண்களாக வரவேண்டும்
என்று புகழ்ந்து பேசினார்.
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழவின் பட்டியல் வழக்கறிஞர் C.கணிமொழி பெண்களுக்கான சட்டம் பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் வாசுகி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் போராசியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.