வ. உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியை அங்கு பயிலும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வரிசையில் நின்று கண்டு களித்தனர்