திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பொன்னர்- சங்கர் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டத்தை பயன்படுத்தி பக்தர்களிடம் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் திருடர்களைப்பிடிக்க போலீசார் சாதாரண உடையில்
பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் படுகளம் பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் பிக்பாக்கெட் அடித்த திருவெறும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷ்(வயது 29), திருப்பூர் மாவட்டம், பொங்களூரைச் சேர்ந்த முனுசாமி(வயது 32), ராஜன் (வயது 60), திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரைச் சேர்ந்த சரவணன் (வயது 32), பெரியசாமி (வயது 35), தாத்தையங்கார் பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 23) ஆகிய ஆறுபேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.