திருச்சி ஏர்போர்ட்டில் 2 பேர் சிக்கினர்!

0 372
Stalin trichy visit

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் இருந்து இறங்கிய புதுக்கோட்டை மாவட் டம் நிஜாம்காலனியைச் சேர்ந்த ரபூர்ரகுமான்(வயது 52) என்பவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் மீது அசாம் மாநிலம் கவுகாத்தி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு இருந்தது தெரிய வந்தது. அவரை விமான நிலைய அதிகாரிகள் அசாம் மாநில போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதேபோல் திருச்சியில்

இருந்து துபாய் செல்ல சென்னை பேரூர் பகுதியைச் சேர்ந்த காதர்ரபீக்(வயது 32) வந்தார். அவரது ஆவணங்களை சோதனையிட்டபோது, அவருக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவரை வேப்பேரி காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.