திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ளது தெற்கு இருங்கலூர் கிராமம். இக்கிராமத்தில் வசிப்பவர் சவரிமுத்து மகன் பிலவேந்திரன் (வயது 56) விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது ஆடுகளுக்கு உணவாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் உள்ள மரத்தில் ஏறி அதன் கிளைகளை வெட்டியபோது
எதிர்பாராதவிதமாக மரத்தின் மேலே சென்ற மின்சார கம்பி மீது வெட்டிய மரக் கிளைப்பட்டு பிலவேந்திரன் மீதும் விழுந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிலவேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.