தொழிலாளியை கல்லால் தாக்கிய பெண் கைது!

0 365
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி பாரதி நகரைச் சேர்ந்தவர் 40 வயதான செந்தில்குமார். கூலித்தொழிலாளியான இவர் மண்ணச்சநல்லூரில் வசித்து வருகிறார். திருப்பைஞ்சீலியில் நடைபெற்று வரும் வனத்தாயி அம்மன் கோயில் திருவிழாவிற்குக்காக தனது சொந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்பவரின்

மனைவி 39 வயதான பரிமளாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரிமளா கீழே கிடந்த கல்லை எடுத்து செந்தில்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து

அவர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரிமளாவை கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள மத்திய மகளிர் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.