வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!

0 264
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அருளாபட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்( வயது 39). இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரேவை உடைத்து அதில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் இரண்டரை பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இந்த நிலையில் வெளியே சென்று விட்டு

வீட்டிற்கு வந்த செந்தில்குமாரின் மனைவி ராணி பணம், நகைகள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனே இதுகுறித்து வளநாடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.