சுதந்திர போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி!

0 261
Stalin trichy visit

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த 5 நாள் புகைப்படக் கண்காட்சி திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் தொடங்கியது. கண்காட்சியை திருச்சி ஆர்டிஓ தவச்செல்வம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில்

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு புத்தகமும் வெளியிடப்பட்டது. 13ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, கள விளம்பர அலுவலர்கள் தேவி பத்மநாபன், வித்யா, பள்ளி தலைமையாசிரியர் சைமன் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.