மாமியார் கழுத்தில் சிகரெட் “சூடு”வைத்த மருமகன் கைது!

0 323
Stalin trichy visit

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 30). இவர் அண்ணா நகரைச் சேர்ந்த தேவி என்பவரது மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு, மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார். கார்த்திக் மனைவி புதுச்சேரியில் பணிபுரிந்து வருகிறார். வாரம் ஒருமுறை தாய் வீடு வந்து

செல்வார். இது கார்த்திக்குக்கு பிடிக்கவில்லை. இதனால் மாமியார் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த தேவியிடம் ரகளையில் ஈடுபட்ட கார்த்திக், மாமியாரை கட்டையால் தாக்கியதோடு சிகரெட்டால் அவரது கழுத்தில் சூடு வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.