ஏற்கனவே 2 இருக்க 3வது கடையா?; கொந்தளிப்பில் போராட்டம்!

0 314
Stalin trichy visit

திருச்சி உறையூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பெண்கள் நாள்தோறும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக வந்து செல்லும் இந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது மூன்றாவதாக புதிய கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் உறையூர் காவல் நிலைத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடைக்கு முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக புதிய கடையை மூட வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் வாயிலாக அழுத்தம் கொடுப்போம் என்று முழக்கமிட்டனர். முப்பதுக்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.