டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்!
ராசிபுரத்திலிருந்து திருச்சி மாவட்டம் முசிறிக்கு வாழைத்தார்களை ஏற்றி வந்த வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், வேனின் மேல்பகுதியில் பயணம் செய்த, முசிறியை அடுத்துள்ள அழகரையைச் சேர்ந்த ஆறு பேரில் தனலட்சுமி (வயது 35), பூமதி (வயது 35) இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டு, மாரிக்கண்ணு(வயது 40),
ஜோதி(வயது 32), ஜெயக்குமார்(வயது 40), அர்ஜூனன்(வயது 40) மற்றும் டிரைவர் அலெக்ஸ்பாண்டியன்(வயது 23) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதன் பேரில் அனைவரும் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.