திருச்சி மாவட்டம் எஸ்.கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி வனஜா (வயது 45). இவர் பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து எஸ்.கண்ணனூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள
ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்தபோது, பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக வனஜாவின் மொபட் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.