தென்னிந்தியாவின் “சிறந்த உடற்கல்வி ஆசிரியர்” – திருச்சி ஆசிரியருக்கு டெல்லியில் விருது!

0 1,338
Stalin trichy visit

திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வரும் உடற்கல்வி துறை தலைவராக இருப்பவர் டாக்டர் பிரசன்ன பாலாஜி. திருச்சி மாவட்டத்தில் விளையாட்டுக்கு என்றும், விளையாட்டு துறை சார்ந்த பல்வேறு செயல்பாடுகளையும். ஆலோசனைகளையும் வழங்கி வருபவர்.
இந்நிலையில் (PEFI) பிசிக்கல் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆஃப் இந்திய அமைப்பானது உடற்கல்வி பயிற்சி ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்க கூடிய ஆசிரியர்களை தேர்வு செய்து தேசிய அளவில் விருது வழங்கி

வருகிறது. தொடர்ந்து ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்களை கௌரவ படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவிலேயே உடற்கல்வி துறையில் சிறந்து விளங்கியதற்காகவும், ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்டதற்காக திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வரும், உடற்கல்வி துறை தலைவருமான பிரசன்ன பாலாஜிக்கு டாக்டர் ஜி.பி.கௌதம்

விருது எனப்படும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற பிசிகல் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா சார்பாக தென்னிந்தியாவின் “சிறந்த உடற்கல்வி ஆசிரியர்” விருதை இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் சந்தீப் பிரதான், திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் பிரசன்ன பாலாஜிக்கு வழங்கினார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.