விக்னேஷ் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி கூத்தூர் விக்னேஷ் பாலிடெக்னிக்கில் வரும் 15ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பாலிடெக்னிக் மாணவர்களுக்கான இந்த வேலைவாய்ப்பு முகாமில் மோட்டார் வாகன துறையில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ், பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிட், சென்னை மற்றும் செங்கல்பட்டு, ஒசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அதன் பல்வேறு சார்பு நிறுவனங்கள்
பங்கேற்கின்றன. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், மெக்கானிகல் டூல் அண்ட் டை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாலிடெக்னிக் டிப்ளமோ பாடப்பிரிவுகளில் மூன்றாமாண்டு பயிலும் 500 மாணவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறவுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மோகன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் விஜயன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.