திருச்சி எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மின்சாரம் சேமிக்கும் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டினுள் இருந்த பிரிட்ஜ் மற்றும் அட்டை பெட்டிகள், சில சாமான்கள் தீப்பிடித்து
வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.